திரேசா கொக்கின் அடுத்த சட்ட நடவடிக்கை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்

கோலாலம்பூர், அக்டோபர் 25-

தமக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக வீட்டின் உடமைகளை பறிமுதல் செய்யும் அளவிற்கு நீதிமன்ற நடவடிக்கையை எடுத்து, / சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் முகமது யூனோஸ்- ஸை கதறவிட்ட டிஏபி செபுதே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக், தற்போது சர்சைக்குரிய அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமது அக்மல் சலே- விற்கு எதிராக அவதூறு வழக்கைத் தொடுத்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களும் Halal சான்றிதழ் பெறும் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததற்காக டிஏபி உதவித் தலைவரான திரேசா கொக்கை, இனவெறியர் என்றும் இஸ்லாத்திற்கும், நாட்டிற்கும் மிரட்டலை ஏற்படுத்தக்கூடியவர் என்றும் கூறியதற்காக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மல்- க்கு எதிராக அந்த பெண் எம்.பி. சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தமது வழக்கறிஞர் எஸ்.என்.நாயர் மற்றும் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவருக்கு வழக்கறிஞர் நோட்டீசை திரேசா கொக் அனுப்பி வைத்துள்ளார்.

சமுதாயத்தின் தலைவர் என்ற முறையில் தம்மை சிறுமைப்படுத்தியதுடன் தமக்கு பெரும் மிரட்டலை ஏற்படுத்தியதற்காக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால், தமக்கு 2 கோடியே 50 லட்சம் வெள்ளி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தனது அவதூறு வழக்கு மனுவில் திரேசா கொக் கோரியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS