1MDB நிதி மோசடி நஜீப்பின் மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன் பிரதமர் கூறுகிறார்

புத்ராஜெயா,அக்டோபர் 25-

அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1MDB – யில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பகிரங்க மன்னிப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயாவில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் தமது மேற்பார்வையில் 1MDB நிறுவனம் இருந்த போது அதில் நடந்த முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மலேசியர்கள் அனைவரிமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்து இருந்தார்.

அதேவேளையில் 1MDB-யில் தாம் எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட நஜீப், அந்த நிறுவனத்தில் நிகழ்ந்த நிதி மோசடிகளுக்கு பிரபல தொழில் அதிபர் ஜோ லோவும், பெட்ரோ சவுதி நிறுவனத்தின் இயக்குநர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS