ஈப்போ, அக்டோபர் 26-
ஈப்போ, கிளேபாங் -கில் உள்ள ஒரு பஷார் ராய– வின் பிரதான நுழைவாயில் அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மாது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
64 வயது மதிக்கத்க்க அந்த ஆடவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பில் நேற்று மாலை 6.13 மணியளவில் போலீசார் தகவல் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிதீன் குறிப்பிட்டார்.
சவப்பரிசோதனைக்கு ஏதுவாக அந்த நபரின் உடல்,ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருப்பதாக அவர் கூறினார்.
விசாரணைக்கு ஏதுவாக அந்த மாதுவை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.