16 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன

தெலுக் இந்தான்,அக்டோபர் 26-

தெலுக் இந்தானில் சாய்வுக்கோபுரத்தின் அருகில் கொண்டாடப்பட்ட சீன சமூகத்தின் கலாச்சார நிகழ்வில் சீன நாட்டுக்கொடிகளை ஏந்திக்கொண்டு, அசைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 16 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

இந்த சீன கலாச்சார நிகழ்வுக்கு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி போலீஸ் பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட அந்த கலாச்சார நிகழ்வில் சீனப்பிரஜைகள் பங்கேற்க அனுமதித்தது மற்றும் அவர்கள் சீன நாட்டுக்கொடிகளை ஏந்தி நின்று காட்சியளிக்க இடம் அளித்தது மூலம் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் போலீஸ் பெர்மிட்டின் நிபந்தனைகளை மீறியுள்ளனர் என்று டத்தோ அசிசி மேட் அரிஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS