அமைச்சின் நேரடி பார்வையில் இந்திய கிராமங்கள்

ஈப்போ , அக்டோபர் 29-

நாடு முழுவதும் அரசாங்க நிலங்களில் அமைந்துள்ள அனைத்து இந்திய கிராமப்பகுதிகள் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று அதன் அமைச்சர் என்ஜிஏ கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இந்த இனிப்பான செய்தி, இந்த ஆண்டுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மிகச் சிறந்த தீபாவளிப் பரிசு என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை புலப்படுத்துவதாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS