கோலாலம்பூர், அக்டோபர் 29-
பெர்லிஸ் , கெடா, பினாங்கு, பேராக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் இன்று பிற்பகலில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் , கிளந்தான், திரெங்கானும் சரவாக்கிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை இலாகாவான Met Malaysia தெரிவித்துள்ளது.