புத்ராஜெயா,அக்டோபர் 29-
நாட்டை உலுக்கிய 1MDB நிதி முறைகேடு ஊழல் தொடர்புடைய வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்வதா அல்லது எதிர்வாதம் புரிய அழைப்பதாக என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நாளை புதன்கிழமை முடிவு செய்யவிருக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த 1MDB வழக்கு விசாரணை தொடர்பில் பிராசிகியூஷன் மற்றும் எதிர்தரப்பு ஆகியோரின் வாதத் தொகுப்புகளை செவிமடுத்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், 228 கோடி வெள்ளி நிதி முறைகேடு மற்றும் லஞ்சம் தொடர்பில் நாளை காலையில் தீர்ப்பளிக்கவிருக்கிறது.
இவ்வழக்கை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் சீக்வேரா,தற்போது புத்ராஜெயா அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதிலும், நஜீப்பின் வழக்கை செவிமடுத்தவர் என்ற முறையில் இத்தீர்ப்பை அளிப்பதற்காக நாளை காலையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு திரும்புகிறார்.