கெடா, நவம்பர் 02-
இவ்வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெடா மாநில திசைகள் செய்தியின் நிருபர் ஹேமா எம் எஸ் மணியம் அவரின் வீட்டிற்கு சிறப்பு வருகையளித்தார் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் பின் இஸ்மாயில் .
தீபாவளி முதலாளன்று QATAR நாட்டிலிருந்து மலேசியாவிற்கு வந்தடைந்துவுடன் கெடா கூலிமிலுள்ள திசைகள் நிருபர் வீட்டிற்கும் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர்களின் வீட்டிற்கு வருகையளித்து மக்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார் டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன்.

டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் கூறுகையில் தீபாவளி பண்டிகைக்கு மேற்கொண்ட இந்த பயணத்தில் ” மலேசியா மடானியின் ” கோட்பாட்டை உணர முடிவத்தாக அவர் குறிப்பிட்டார். தீபாவளி பண்டிகையின் சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மலாய்க்காரர்கள் மற்றும் சீன அன்பர்கள் அனைவரும் இந்தியர்களுடன் இணைந்து இத்தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் நோன்பு பெருநாள் சீன பெருநாள் காலங்களில் இந்திய அன்பர்கள் அவர்களுடன் இணைவது மடானியை குறிக்கின்றது என்றார் சைஃப்புடின் நசுதியோன். மக்களிடைய ஒற்றுமை மேலோங்கி நிலைத்திருப்பத்தாக சைஃப்புடின் நசுதியோன் தெரிவித்தார்.

நேற்று கூலிம் பண்டார் பாரு மக்கள் கூட்டணி கட்சியின் துணைத் தலைவர் சிவகுரு சுப்பிரமணியம் அவரின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு மற்றும் பாடாங் செராய் மக்கள் கூட்டணி கட்சியின் துணைத் தலைவர் பிரகாஷ் ஆகியோர் வீட்டிற்கு சென்றார் டத்தோ ஸ்ரீ சைஃப்புடின் நசுதியோன் பின் இஸ்மாயில்.
