கோலாலம்பூர், நவம்பர் 02-
15ஆவது பொதுத் தேர்தல் (PRU15) பின்னர்,18 அரசியல் கட்சிகள் மற்றும் சில சுயேச்ச நாடளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஒற்றுமை அரசின் நிலைத்தன்மை குறித்து தனது நம்பிக்கையை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படுத்தினார்.
Free Malaysia Today ஊடகத்தின் அறிக்கையின்படி, பிரதமர் கூட்டுறவு தற்போதைய காலகட்டத்திற்குப் பிறகும் தொடரும் என எதிர்பார்ப்பதாகவும் அடுத்த தேர்தலுக்குப் பின்னரும் இந்தக் கூட்டணி வலுப்பெறும் என பிரதமர் கூறினார்.
தற்போது நாட்டின் அரசியல் நிலைமை மிக அமைதியாகவும் நிலையானதாகவும் இருப்பதற்கு காரணமாக விளன்ங்கு ஒற்றுமை அரசாங்க கூட்டணியின் உறவு அடுத்த கட்டத்திலும் தொடரும் என தாம் நம்புவதாக பிரதமர் மேலும் கூறினார்.
பிரதமராக இரண்டு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி அடுத்த தேர்தலுக்குப் பின் தொடருமானால், நாட்டின் வளர்ச்சி மென்மேலும் மேலோங்கி வளரும் என அவர் கூறினார்.