T15 வகைப் பிரிவினருக்காக புள்ளியியல் துறை (DOSM) நிர்ணயித்த மாதாந்திர வருமானமான RM13,000 குறைவானதாகக் கருதப்பட்டு, அதை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது இன்னும் ஆய்விலுள்ளதாக விளக்கமளித்த பிரதமர், மாதத்திற்கு RM13,000 வருமானம் பெறும் நபர்கள், தங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை திரும்பப் பெறுவது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
அத்தகையவர்களில் பலர், பல்கலைக்கழகம் உட்பட பல குழந்தைகளைக் கொண்டிருப்பதாகவும், இதனால் அவர்கள் T15 வகுப்பில் முறையாகப் பொருந்தவில்லை என்றும் அவர் விளக்கினார்.