தேசிய விவசாயிகள் அமைப்பு (NAFAS) மற்றும் கஜானா நாசியோனல் பெர்ஹாட் (Khazanah) மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய(SPRM) அதிகாரிகளின் விசாரணைகளில் தன்னுடைய தலையீடு இருக்காது என்றும், அந்த விசாரணைகளைத் தடுக்கவும் மாட்டேன் என்று மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உறுதியாக கூறினார்.
அவரின் கூற்றுப்படி, எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், அது அரசு அல்லது தனியார் நிறுவனம் என்பதற்கு பொருட்டல்லாமல், பதவி அல்லது அதிகாரத்தைப் பொருட்படுத்தாமல் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் பிரதமர் கோரினார்
இவ்விரு அமைப்புகளின் மீதான விசாரணையில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்றும் தவறு இருந்தால் வழக்குத் தொடருங்கள், என்று அ2024 ஆம் ஆண்டிற்கான தேசிய சிறிய வணிகர்களின் தின விழாவில் (HPPK) பிரதமர் கூறினார்.