18 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

பினாங், நவம்பர் 03-

அண்மையில் பினாங்கில், மின்சாரப் பேருந்தில் பயணித்த 18 வயது இளைஞர் Mohamad Nur Asymawi Jasmadi, தனது கைப்பேசியை அப்பேருந்தில் மின்னூட்டம் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அச்சம்பவர்த்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட மின்சாரப் பேருந்து சேவையை நிறுத்தி வைக்கும்படி தரைப் பொது போக்குவரத்து நிறுவனத்தை மலேசியா போக்குவரத்து பணித்துள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து ஆராய APAD, JPJ MIROS ஆகியவை உட்படுத்திய புதிய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார். இனி, இது போன்ற சம்பவம் ஏதும் நிகழாது இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறிய அமைச்சர் அந்தோணி லோக, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS