12,296 வாகனங்கள் மீது சோதனை செய்யப்பட்டது

கோலாலம்பூர், நவம்பர் 03-

சாலைப் போக்குவரத்துத் துறை JPJ தற்பொழுது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் Operasi Khas Motosikal சோதனையில் 12,296 வாகனங்கள் மீது சோதனை செய்யப்பட்டது. அதில் 6,756 மோட்டார் சைக்கிள்கள் ஆகும்.

நடவடிக்கை எடுக்கப்பட்ட 1,405 வாகனங்களில் 1,003 மோட்டார் சைக்கிள்கள் என JPJ இன் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் Muhammad Kifli Ma Hassan இது குறித்து தெரிவிக்கயில் குறிப்பிட்டார்.

நவம்பர் 1ஆம் தேதொ தொடங்கி இவ்வாண்டு இறுதி வரை நடக்கவிருக்கும் இச்சோதனையில் அதிக சத்தம் கொண்ட வாகனங்கள், சாலை வரி செலுத்தப்படாத வாகனங்கள், வுதிமுறைகளை மீறு அதிகமாக மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் ஆகிய குற்றங்கள் பெரும்பான்மையாகக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிள்களை உட்படுத்தி 70% சாலை விபத்துகள் ஏற்படுவதால், இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மோட்டார் சைக்கிளை முன்னிலைப்படுத்தி இந்த சோதனை நடவடிக்கி முன்னெடுக்கப்பட்டாலும், இதர வாகங்களையும் தமது தரப்பு பரிசோதிப்பதாகவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை நாடு முழுவதும் நடந்து வருவதையும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS