கான்சில், சாகா கூரையில்: ‘தற்காலிகமாக ‘பார்க்கிங்

ஜெர்லூன், நவம்பர் 03-

வீட்டில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு இட வசதி போதாததால் தனது இரு கார்களையும் வீட்டின் கூரையின் மேல் நிறுத்தி வைத்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஆயேர் ஈத்தாமைச் சேர்ந்த 64 வயது அவாங் அலி அப்துல்லா.

Perodua Kancil, Proton Saga ஆகிய இரு கார்களையும் கான்கிரிட்டால் ஆன தனது வீட்டின் கூரையில் நிறுத்து வைத்த விவகாரம் இவ்வளவு வேகமாகப் பரவும் எனத் தாம் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

கடந்த வியாழக்கிழமை 30 நிமிடங்களில் கிரேனின் உதவியுடன் அந்த இரு கார்களையும் வீட்டின் கூரை மீது நிறுத்தி, விருந்து நிகழ்ச்சிக்கு தமது வீட்டில் இட வசதி ஏற்படுத்த நிணைத்தார் அவர். ஆனால், வந்திருந்த அனைவரையும் கூரை மேல் நிறுத்தி வைக்கப்பட்ட2 கார்கள் கவர்ந்து விட்டன என்றார்.

WATCH OUR LATEST NEWS