10 நபர்கள் பங்கு முதலீட்டுத் திட்டத்தில் பலியாகி, RM3 மில்லியனை இழந்தனர்

பூச்சோங்,நவம்பர் 03-

பெரும் லாபத்தை அடையும் பேராசையில், 40 முதல் 60 வயதுள்ள 10 பேர், இணையத்தின் மூலம் முதலீட்டு மோசடியால் 3 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் முகநூலில் செய்யப்பட்ட விளம்பரத்தைக் கண்டு அந்த கோசடி கும்பலிடம் சிக்கி தங்களின் பணத்தை இழந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

6 முதல் 10 விழுக்காடு வரையிலான இலாப ஈவு பெறும் திட்டத்தில் இணைந்த அவர்கள் தற்பொழுது மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திடமும் காவல் துறையிடமும் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரத்துவத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய PKIPN எனப்படும் Pertubuhan Kebajikan Integriti Persahabatan Nasional அமைப்பின் தோற்றுநர் ஜோசப் பிரகாஷ, குறிப்பிடுகயில், பிஉகார் பெற்ற அனைத்து அதிகாரத்துவத்தினரும் உடனடி நடவடிக்கை எடுக்கக் களத்தில் இறங்க வேண்டும் என்றார்.

மேலும் இதுபோல் மோசடி நடவடிக்கைகள் நடக்கமால் இருக்கவும் இவ்வாறான கும்பல் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயல்படுவதை தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS