பெட்டாலிங் ஜெயா,நவம்பர் 04-
ஆறாயிரம் போதை மாத்திரைகளை வைத்திருந்ததாக தாய்லாந்தின் சுங்கை கோலோக்- கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆறு மலேசியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றத்தடுப்பு போலீஸ் இயக்குநர்டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.
கைதான அந்த ஆறு நபர்களும் போதைப்பொருள் விநியோகம் செய்யும் கும்பலுடன் தொடர்புடையவர்களா? என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்லாந்த போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 6 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளும் மலேசியாவிற்கு கடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்ததா? என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.