ஆடவர் படுகொலை – மனைவி உள்பட நால்வர் கைது

லஹாட் டத்து,நவம்பர் 04-

ஆடவர் ஒருவர் படுகொலை தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அந்த நபரின்
மனைவி உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சபா, லஹத் டது, ஜாலான் பிஓஐகே, பத்து 3 இல் கடந்த
வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் 51 வயதுடைய ஆடவர்
உயிரிழந்ததாக லஹாட் டத்து மாவட்ட துணைப் போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் ஜிம்மி பன்யாவ் கூறினார்.

அன்றைய தினம் பிற்பகல் 12.45 மணியளவில் போலீசாரைத் தொடர்பு
கொண்ட அந்த பெண்மணி, தன் கணவர் படுகொலை செய்யப்பட்டத்
தகவலைத் தெரிவித்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த ஆடவரின் உடலை பரி
சோதனை செய்த போது வலது கன்னம், தலையின் பின்புறம்
மற்றும் நெற்றியில் வெட்டுக் காயங்களும், வலது மார்பு, முதுகு
மற்றும் இடுப்பில் வீக்கமும் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அந்த ஆடவரின் உடல்
லஹாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டுச்
செல்லப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஊகங்களை வெளியிட
வேண்டாம் என பொது மக்களைக் கேட்டுக் கொண்ட அவர், இம்மரணம்
தொடர்பில் போலீஸ் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி
வருகிறது என்றார்..

WATCH OUR LATEST NEWS