குற்றச்சாட்டை மறுத்தது SPRM

நவம்பர் 04-

முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, 94 லட்சம் வெள்ளியை கண்டு பிடித்துள்ளதாக வெளியான தகவலை, அந்த ஆணையம் மறுத்துள்ளது.

பணம் மீட்கப்பட்டதாக கூறப்படும் தகவல் தொடர்பில் SPRM, இதுவரையில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்துள்ளார்.

இது போன்ற விவகாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களை வெளியிடுவதற்கு உரிமை உண்டு.

ஆனால், அடிப்படையான மற்றும் துல்லியமான தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டும். இது, வீண் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று Azam Baki அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS