இடிபாடுகளுக்கு இடையில் கார் சிக்கியது

அம்பாங் ஜெயா, நவம்பர் 04-

இன்று அதிகாலையில் பண்டன் இன்டா, லெம்பா மஜூ-வில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் கார் ஒன்று இடிபாடுகளில் சிக்கியது.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அதிகாலை 4.35 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohd Azam Ismail தெரிவித்தார்.

ஒரு பெரிய கால்வாய் அருகில் வாகனங்கள் நிறுத்தும் பொது இடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. Proton Saga ரக கார் ஒன்று சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS