வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 350.3 ஆவது கிலோ மீட்டரில் பீடோருக்கு அருகில் இரு லோரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். அவரின் பிள்ளை படுகாயம் அடைந்தார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.55 மணியளவில் நிகழ்ந்தது.
அந்த மாது செலுத்திய காலணிகள் ஏற்றப்பட்டு இருந்த மூன்று டன் எடைகொண்ட மிட்சுபிஷி லோரி, மற்றொரு லோரியின் பின்புறம் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி, படுகாயம் அடைந்த 36 வயது மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.