அனைத்துமே மோசடி வேலைகள் : புக்கிட் அமான் எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ.6-

பல்வேறு கவர்ச்சிக்கரமான லாபஈவுகளுடன் சமூக வலைத்தளங்களில் வாயிலாக அறிவிக்கப்படும் அனைத்து முதலீட்டுத் திட்டங்களுமே மோசடிக்குரியவை என்று பொது மக்களுக்கு, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வாயிலாக முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்கள் மோசடிக்குரியவை, ஏமாற்று வேலைகளைக்கொண்டவை என்பது பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருந்த போதிலும், இன்னமும் மக்கள், அந்த முதலீட்டுத் திட்டங்களை நம்பி, முதலீடுகளை செய்து, தங்கள் பணத்தை இழந்து வருவது கவலை அளிக்கிறது என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்புப்பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட்யூசோப் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் பணத்தை இழந்தவர்கள், பெரும்பாலும் மிக காலதாமதமாகவே உணர்கின்றனர், போலீசில் புகார் செய்கின்றனர்.

சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படுகின்ற விளம்பரங்களில் எந்த முதலீட்டுத் திட்டத்தில் தாங்கள் பணத்தை இழந்துள்ளனர் என்பதுகூட பலருக்கு தெரியாமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் மலேசிய தொடர்புத்துறை, பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்புடன் தேவையான அமலாக்க நடவடிக்கைகளை தங்களின் வர்ததக குற்றத்தடுப்புப்பிரிவு தொடர்ந்து அமல்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

WATCH OUR LATEST NEWS