புகைப்பிடித்தல் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்டுகிறது

கோலாலம்பூர், நவ. 19-


கடந்த அக்டோபர் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் 2024 இன் கீழ் வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் பயன்பாடு, ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்தார்.

தேசிய அளவில் மின்னியல் சிகரெட் விற்பனையை தடை செய்யக்கூடாது என்பது கூட்டரசு அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். எனினும் ஊராட்சி மன்றங்களின் வாயிலாக தத்தம் மாநிலங்களில் மின் சிகரெட்டிற்கு தடைவிதிப்பது மீதான கொள்கையை அமல்படுத்தும் விவகாரத்தை அந்தந்த மாநில அரசாங்கத்திடமே மத்திய அரசாங்கம் விட்டு விடுவதாக டாக்டர் சுல்கிப்லி குறிப்பிட்டார்.

மின்னியல் சிகரெட்டை அரசாங்கம் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா வலியுறுத்தியிருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் டாக்டர் சுல்கிப்லி இதனை தெரிவித்தார்.

இளைஞர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடுவதற்கு மின் சிகரெட் பயன்பாடு ஒரு தொடக்கமாக அமைகிறது என்று சுல்தான் குறிப்பிட்டு இருந்தார்.

WATCH OUR LATEST NEWS