பெக்கான், நவ.19-
குவந்தான் – சிகாமட் சாலையில் பூரோங் உந்தா அருகில் செக்ஷன் 102 ஆவது சாலை, வரும் வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்துக்கு மூடப்படும் என்று பகாங், பெக்கான் பொதுப்பணி இலாகா அறிவித்துள்ளது.
நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு அந்த சாலை அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூடப்படும் என்று இஅவ்விலாகா தெரிவித்துள்ளது.
அந்த சாலையில் பெய்லி பாலம் நிர்மாணிப்பதற்கு வழிவிடும் வகையில் அந்த சாலை தற்காலிகமாக மூடப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.