நவ. 20-
கடந்த வியாழக்கிழமை குவாங்கில் சைக்கிள் சவாரி செய்து கொண்டிருந்த சிறுமி, ஒரு வாகனத்துடன் மோதி காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தனது உடை சங்கிலியில் சிக்கிக் கொண்டு விழுந்ததால் ஏற்பட்ட விபத்து என்று காவல்துறை கூறியுள்ளது.
சுங்கை பூலோ மாவட்ட காவல் துறையின் தலைவர் மொஹமட் ஹபிஸ் கூறுகையில், இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஐந்து பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமது தரப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவர்களில் இருவர், அந்த சிறுமி சாலையில் விழுந்து கிடப்பதை கண்டு உதவிக்குச் சென்றனர். மேலும், சிறுமி பயன்படுத்திய சைக்கிளை ஆய்வு செய்த போது வேறு ஏதாவது வாகனம் மோதியதற்கான எந்த அடையாளமும் இல்லை என்றார் அவர்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தவறான தகவல்கள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக 1987ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் 43 (1) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.