கடுமையான தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது

நவ. 20-

மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia இன்று, கிளாந்தான், திராங்கானு, பகாங் ஆகிய மாநிலங்களில் கடுமையான தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும் என அது தெரிவித்துள்ளது.

கிளாந்தானில் Tumpat, Pasir Mas, Kota Bharu, Jeli, Tanah Merah, Bachok, Machang, Pasir Puteh, Kuala Krai ஆகிய பகுதிகள் இந்த எச்சரிக்கையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. பகாங்கில் Jerantut, Kuantan, Pekan, Rompin ஆகிய பகுதிகள் உள்ளடங்கும்.

மக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் சமூக ஊடகப் பக்கங்களிலும்வெளியிடப்படும் மிக அண்மைய வானிலை தகவல்களைப் பெறலாம் என்று MetMalaysia தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS