நவ. 20-
சீன மாஸ்டர்ஸ் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Takuma Obayashi இடம் தோல்விச் சந்தித்த மலேசியாவின் ஒற்றையர் பூப்பந்து வீரர் Leon Jun Hao, அப்போட்டியின் தொடக்கக் கட்டத்திலேயே வெளியேறினார். கடந்த வாரம் ஜப்பான் மாஸ்டர்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்த 25 வயதான Leon Jun Hao , Shenzhen Gymnasiumலஇல் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் தமது அபாரத் திற்மையை வெளிக்காட்டத் தவறி 21க்கு 12, 21க்கு 11 என்ற நேர்செட்டில் தோல்வி அடைந்தார். ஜப்பானிஉய ஆட்டக்காரர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
அதே சமயம், ஆண்கள் இரட்டையர் பிரிவில், Ong Yew Sin – Teo Ee Yi இணையினர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தனர். அவர்கள் முதல் செட்டை வென்ற போதிலும், இறுதியில் டென்மார்க் வீரர்களிடம் தோல்வியடைந்தனர்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றிக் கூட்டணியான Pearly Tan – M. Thinaah ஆகியோர் சீன நாட்டு வீரர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.