அந்த விவகாரம் தொடர்பாக பலர் போலீசில் புகார் செய்திருந்தனர்

நவ. 20-

மலேசியாவின் அரசாங்கத்தின் தலைவரான Datuk Seri Anwar Ibrahim-ஐ அவதூறு செய்யும் வகையில் சமூக ஊடகங்களில் காணொலி ஒன்று பரவியது. அந்த விவகாரம் தொடர்பாக பலர் போலீசில் புகார் செய்திருந்தனர்.

அந்த விவகாரரத்தைக் காவல் துறை கடுமையாகக் கருதி விசாரித்து வருவதாக அரச மலேசியக் காவல் துறையின் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார். இதுவரை இவ்விவகாரம் தொடர்பில் 11 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் காணொலியால், பிரதமர் அன்வார் இஸ்ரேலை அங்கீகரித்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. ஆனால், அவர் இதை மறுத்துள்ளார். அவர் இஸ்ரேலை ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை என்றும், மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே எந்தவித தூதுவரவு உறவும் இல்லை என்றும் Tan Sri Razarudin Husain தெளிவுபடுத்தினார்.

காவல் துறை இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருவதோடு இதில் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS