கோரசாலை விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் பலி

புத்ராஜெயா, நவ. 21-


புத்ராஜெயா, ஐஓஐ அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி தடம்புரண்டத்தில் கர்ப்பிணி மாது உட்பட மூவர் உயிரிழந்தனர். மற்றொரு கர்ப்பிணி மாது கடுமையான காயங்களுடன் மருத்துவமனைல் சேர்க்கப்பட்டார்.

இவ்விபத்து நேற்று பின்னிரவு 12.10 மணியளவில் நிகழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இரண்டு ஆண்கள், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் என நால்வர் பயணம் செய்த பெரோடுவா வீவா கார் சொந்தமாகவே சாலையை விட்டு விலகி தடம்புரண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 20 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய கர்ப்பிணி மாது உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே மாண்டவர். கர்ப்பிணியான மற்றொரு மாது, புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களின் உடல்களை தீயணைப்பு, மீட்புப்படையினர், பிரத்தியேக சாதனங்களை கொண்டு மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS