ஹசான் கரீம், ஒழுங்கு நடவடிக்கை வாரியம் முன் நிறுத்தப்படுகிறார்

கோலாலம்பூர், நவ. 21-


பிகேஆர் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கடுமையாக குறைகூறியும், விமர்சனம் செய்தும் வரும் பிகேஆர், பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், பிகேஆர். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் முன் நிறுத்தப்படவிருக்கிறார்.

நாட்டின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில் தாம் அங்கம் வகிக்கும் பிகேஆர் கட்சி தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கடுமையாக குறைகூறியதன் விளைவாக அந்த பிகேஆர் எம்.பி. ஒழுங்கு நடவடிக்கை வாரியத்தின் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

இரண்டாவது 5ஜி அலைக்கற்றை உரிமம் தொடர்பில் மாமன்னரை அவமதிக்கும் செயலிலும் ஹசான் கரீம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக நாட்டில் கைபேசி ஒருங்கமைப்புச் சேவையை வழங்கி வரும் யு மோபைல் சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கு நாட்டின் 5ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது தொடர்பில் ஹசான் கரீம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS