கோலாலம்பூர், நவ.21-
கடந்த அக்டோபர் முதல் தேதி கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் காரில் இறந்து கிடந்த மாதுவை சோதனை செய்வதைப் போல அவரின் விலை உயர்ந்தப் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் போலீஸ்காரர் ஒருவர், நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், ஜாலான் டூத்தா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.
அந்த போலீஸ்காருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்ட நிலையில் நாளை காலையில் அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் றிக்கையில் தெரிவித்துள்ளது.
இறந்து கிடந்த மாதுவின் உடமைகள் திருடப்பட்ட சம்பவத்தில் 28 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய கான்ஸ்டபில் அந்தஸ்தைக்கொண்ட நான்கு போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்டு இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதற்கு முன்பு தகவல் சாதனங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன.
இறந்து கிடந்த மாதுவின் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருப்பட்டுள்ளதாக உள்ளூர் ஆடவர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்த அந்த நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.