டிசம்பர் – 01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் புகுந்துள்ள தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் வழங்கப்படும் உணவில் நச்சுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க உணவின் தரத்தை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad கூறினார்
வெள்ளத்தின் போது நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில நிலையிலான சுகாதார வசதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தேவைப்பட்டால் வெள்ள காலத்தில், சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மற்ற சுகாதார வசதிகளுக்கு உதவ அனுப்பப்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.