டிசம்பர் – 01
வெள்ளத்தின் தீவிரம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கெடாவின் ALOR SETAR, சிக் ஆகிய வட்டாரங்களில் உள்ள சில பகுதிகளில் மின்சார விநியோகம் Tenaga Nasional Berhad – TNB நிறுத்தியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட முகநூல் பதிவில், ALOR SETARரில் 11 மின் இணைப்புகளும் சிக் வட்டாரத்தில் ஒரு மின் இணைப்பும் இன்று பிற்பகல் 1 மணி அளவில் மின் தடை செய்யப்பட்டதாக TNB தெரிவித்துள்ளது.
ALOR SETARரில், Kampung Bukit Derang, Kampung Bukit Hijau, Kampung Empa 1 dan 2, Kampung Teras, Kem Tentera Udara Diraja Malaysia, Kampung Alor Madi, Kampung Pulau Kerengga, Kampung Titi Gajah 1, Kampung Alor Perang, Kampung Alor Senjaya, Rumah Pam Alor Gunung ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
சிக் வட்டாரத்தில், Kampung Padang Chicar பாதிக்கப்பட்டுள்ளது என்று இன்றைய பதிவில் கூறப்பட்டுள்ளது.
மூழ்கிய மின்சார கம்பங்களைக் கண்டால், பொது மக்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என TNB எச்சரித்துள்ளது.