டிச.16-
பெற்றோர் கல்வித் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக டிஜிட்டல் உலகில் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு உதவுவதற்கும் அல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது மலேசியாவின் மக்கள் தொகை, குடும்ப மேம்பாட்டு நிறுவனமான LPPKN. இந்தத் திட்டங்கள் பெற்றோரின் அறிவையும் திறன்களையும் மேம்படுத்துவதன் மூலம் குடும்பங்கள் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என மகளிர், குடும்ப, சமூக நல மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk Seri Noraini Ahmad தெரிவித்தார்.
PEKA எனப்படும் குடும்ப, குழந்தைகள் பாதுகாப்புக் கல்வி, KASIH டிஜிட்டல் பெற்றோரியல் கல்வி ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளை உருவாக்கியுள்ளது LPPKN. விபத்து தடுப்பு, மீட்பு இணையப் பாதுகாப்பு போன்ற அடிப்படை திறன்களை PEKA வழங்குகிறது. அதேசமயம், KASIH டிஜிட்டல் பெற்றோரியல் கல்வியானது தற்கால குழந்தைகளின் சவால்களை நிர்வகிக்க பெற்றோர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
இதுவரை 401 PEKA பட்டறைகளை நடத்தி 11,917 பங்கேற்பாளர்களுக்கு பயனளித்துள்ளது. அதேசமயம், 40 KASIH டிஜிட்டல் பெற்றோரியல் பட்டறைகள் நடத்தப்பட்டு 1,129 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றதாக துணை அமைச்சர் தகவல் வெளியிட்டார்.