டிச.16-
சமூக ஊடகங்களில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக கூறப்படும் ஆடவர் குறித்து தொடர்பு, பல்லூடக ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் Fahmi Fadzil கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட ஆடவர் மன்னிப்பு கேட்டாலும், இதுபோன்ற செயல்கள் தவறானது என்றும், அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.
சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்தில் ஒரு பயனர் TikTok இல் மாமன்னர், பிரதமர் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டு பின்னர் அதை நீக்கி மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்றார் Fahmi Fadzil