டிச. 18-
கிளந்தான், குவா மூசாங் – கோல லிப்பிஸ் சாலையின் 16 ஆவது கிலோ மீட்டரில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் திரெங்கானு ஆசிரியர் பயிற்சி கல்விக்கழகத்தைச் சேர்ந்த பயிற்சி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
காலை 6.45 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்த பயிற்சி ஆசிரியரும், அவரின் மூன்று நண்பர்களும் Proton X50 ரக காரில் கோலாலம்பூரிலிருந்து திரெங்கானு, Sultan Mizan ஆசிரியர் பயிற்சி கல்விக்கழகத்தை நோக்கி திரும்பிக்கொண்டு இருந்த போது, டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் மேலும் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில் 22 வயது பயிற்சி ஆசிரியர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.