கோலாலம்பூர், டிச. 18-
வரும் 2025 ஆம் ஆண்டு முதல் குடிநுழைவு தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஓராண்டுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், முடிவை தெரிந்து கொள்வதற்கு ஒரு நீண்ட கால அடிப்படையில் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இனி இருக்காது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
தேசிய பதிவு இலாகாவில் உள்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள SOP நடைமுறைகளின்படி குடிரியுரிமை தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். குறிப்பாக, அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? இல்லையா என்பது குறித்து ஓராண்டுக்குள் விண்ணப்பத்தாரர்களிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்று சைபுடின் விளக்கினார்.