மூவார், டிச. 19-
ஜோகூர், மூவார், பக்ரி, தாமான் ஸ்ரீ திரே வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்த ஆயுதமேந்திய கொள்ளை தொடர்பில் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்த வீட்டில் பொருத்தப்பட்ட ரகசிய கேமராவில் பதிவை அடிப்படையாக கொண்டு கொள்ளையர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
தனது வீட்டின் முன் வாசலில் காரை நிறுத்துவதற்கு ஆடவர் முற்பட்ட போது, வீட்டின் முன்வாசலில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட ஆடவரை மடக்கியதுடன், ஆயுதமுனையில் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துக்கொண்டு, வீட்டின் உரிமையாளரின் பெரோடுவா மைவீ காரையும் களவாடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் அந்த கார், பின்னர் மலாக்கா, ஜாசினின் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.