செர்டாங், டிச.19-
சிலாங்கூர், செர்டாங்கில் தொடக்கப்பள்ளி ஒன்றில், மின்சாரம் தாக்கியதாக நம்ப்படும் 12 வயது மாணவன் உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்தது
இது குறித்து 36 வயது மாது புகார் செய்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
அந்த மாது பணியிடத்தில் இருந்த போது, மாணவன் ஒருவன் திடீரென்று சுயநினைவு இழந்த நிலையில் கிடந்ததாகவும், அந்த மாணவனை மின்சாரம் தாக்கியிருக்கக்கூடும் என்று தாம் சந்தேகித்தாக அந்த மாது தமது புகாரில் தெரிவித்துள்ளதாக அன்பழகன் குறிப்பிட்டார்.
மாலை 6.50 மணியளவில் அந்த மாணவன் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனை திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்ட போதிலும் சவப்பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாக அன்பழகன் குறிப்பிட்டார்.