டிச. 20-
ஆண்டு இறுதி விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை நிறுவனமான PLUS Malaysia Berhad பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 25 smart laneகளை அமைப்பது, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டோல் சாவடிகள், பராமரிப்பு பணிகள், போக்குவரத்து கண்காணிப்பு மையம், போக்குவரத்து சீராக்க RELA உறுப்பினர்கள் என பல்வேறு இடங்களில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
டிசம்பர் 20 தொடங்கி ஜனவரி 2 வரை நெடுஞ்சாலை ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும். MyPLUS செயலி மூலம் 24 மணி நேர போக்குவரத்து தகவல்களையும் பயண அட்டவணைகளையும் PLUS வழங்க உள்ளது. சாதாரண நாட்களை விட கிறிஸ்துமஸ், ஆண்டு இறுதி விடுமுறைகளில் 14 விழுக்காடு % போக்குவரத்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளவும் ஓய்வு இடங்களைப் பயன்படுத்தவும் பிளஸ் அறிவுறுத்தியுள்ளது. டோல் மையங்களில் கழிப்பறைகளும் தொழுகை அறைகளும் உள்ளன. மத்திய பகுதியில் 15, வடக்கு பகுதியில் 3, தெற்கு பகுதியில் 7 என மொத்தம் 25 smart laneகள் இயக்கப்படும்.
அவசர காலங்களைத் தவிர, அனைத்து பராமரிப்பு பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன எனவும் பிளஸ் குறிப்பிட்டுள்ளது,