தனியார் துறையின் கருத்துக்களை அரசாங்கம் பெற வேண்டும்

டிச. 20-

உயர்கல்வித் திட்டம் 2025-2035 ஐ தயாரிப்பதில் தனியார் துறையின் கருத்துக்களை அரசாங்கம் பெற வேண்டும் என்று MEF எனப்படும் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தனியார் துறையே பட்டதாரிகளின் முக்கிய வேலை வழங்குநராக இருப்பதால், அவர்களின் கருத்து முக்கியம் என MEF தலைவர் Syed Hussain Syed Husman தெரிவித்தார்.

கல்வி அறிவுக்கும், வேலைச் சந்தையில் தேவைப்படும் திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை உடனடியாகக் கையாள வேண்டும். தனியார் துறையின் வேலை கலாச்சாரம் கல்வி நிறுவனங்களின் சூழலில் இருந்து வேறுபட்டது எனவும், தனியார் துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறன்களை வளர்ப்பதன் மூலம் பட்டதாரிகள் திறம்பட செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, புதிய கல்வித் திட்டம் உள்ளூர் வல்லுநர்களின் உதவியுடன் உருவாக்கப்படும் என்றும், இது அடுத்த 10 ஆண்டுகளுக்கான உயர்கல்வியின் திசையைத் தீர்மானிக்கும் என்றும் கடந்த டிசம்பர் 16 ஆம் நாள் உயர்கல்வி அமைச்சர் Zambry Abdul Kadir தெரிவித்தார். பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப திட்டம் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

புதிய திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் உலகளாவிய அனுபவங்களை பெறவும், தொழில்முனைவோர்களாக உருவாகவும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் கல்வியாளர் Hasnah Toran பரிந்துரைத்தார். வேலை தேடும் பட்டதாரிகளாக மட்டும் இல்லாமல், தொழில் தொடங்கும் திறனையும் வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS