டிச. 20-
மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடுவதற்கானப் புதிய முயற்சியை மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்ளும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இந்த விமானத்தின் மர்மத்தை விடுவிக்க மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்தியப் பெருங்கடலில் 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணிகள் நடைபெறும். வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் அண்மையத் தகவல் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் இந்த புதிய தேடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே அரசாங்கம் Ocean Infinityக்குப் பணம் செலுத்தும்.
இந்த முடிவு, MH370 விமானத்தில் பயணித்த குழு, பயணிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு பதிலளிக்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியை காட்டுகிறது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.