பந்திங், டிச. 20-
சிலாங்கூர், கோல லங்காட், ஜென்ஜாரோம் பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த மோதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 25 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலில் ஆடவர் ஒருவர் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகியதாக கோலலங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். முகமட் அகஅக்மாரிஸால் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று இரவு 10.30 மணியளவில் பந்திங் மருத்துமனையிலிருந்து மருத்துவர் ஒருவர் புகார் அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆடவர் ஒருவர் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளாகி, தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்த புகாரில் மருத்துவர் தெரிவித்து இருப்பதாக முகமட் அகஅக்மாரிஸால் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆடவர்களும் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.