கோலாலம்பூர், டிச. 20-
வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாது என்று எரிபொருள், நீர் உருமாற்று அமைச்சு அறிவித்துள்ளது.
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மின்சார மானியங்கள் செயல்படுத்துவதன் மூலம் வீட்டுப் பயனீட்டாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தற்கும், அவர்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதில்லை என்று கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.