டிச. 22-
கடந்த டிசம்பர் 15 வரை ஆன்லைன் கொள்முதல் மோசடிகளால் சுமார் 62 மில்லியன் ரிங்கிட் இழப்பு பதிவாகியுள்ளது. வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் Datuk Seri Ramli Mohamed Yoosuf, மின்னியல் வணிக தளங்களின் அதிகரிப்பு காரணமாக இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.
முகநூல் விளம்பரங்கள் மூலம் 3,457 மோசடி வழக்குகளும், புலனம் வாயிலாக விளம்பரங்கள் தொடர்பில் 1,168 வழக்குகளும் பதிவாகியுள்ளன. டிக்டோக், டெலிகிராம் செயலிகள் முறையே 800, 771 வழக்குகளை பதிவு செய்துள்ளன. மொத்தமாக 6,909 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன என Ramli தகவல் அளித்தார்.
ஆன்லைனில் வாங்குபவர்கள் மோசடியில் சிக்காமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். முதலீட்டு மோசடிகளில் டெலிகிராம் முக்கிய ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது, அதைத் தொடர்ந்து முகநூலும் புலனமும் உள்ளன.
நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாத உள்ளடக்கத்தின் மிகுதி ஆபத்தான அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. எனவே, இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தும் போது மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு Ramli அறிவுறுத்தினார்.