கோலாலம்பூர், டிச. 22-
நாடு முழுவதும் உள்ள இந்திய வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டுக்காக, வணக்கம் மடானி எனும் திட்டத்தின் வாயிலாக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று டிசம்பர் 22 ஆம் நாள் காலை 11.00 மணி அளவில் BRICKFIELDS இல் உள்ள கலாமண்படபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்மைப் பிரதிநிதித்து தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ இரமணன் கலந்து கொண்டு நிதியுதவியை எடுத்து வழங்கினார்.
வணக்கம் மடானி திட்டத்தின் வாயிலாக பிரதமரின் சிறப்பு ஒதுக்கீட்டில் இருந்து3. 17 மில்லியன் ரிங்கிட் 88 இந்து கோயில்களுக்கும் 2 கிறித்துவ தேவாலயங்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் Yang Berbahagia துணை அமைச்சர் இரமணனின் அரசியல் செயலாளர் Datuk Anbumani Balan, அமைச்சின் சட்ட ஆலோசகர் Mankiranjit Kaur Mehinder Singh, SUNGAI SIPUT நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் , பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.
இந்த நிதி உதவி, மடானி அரசாங்கத்தின் இந்திய சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன்பு, தொழில்முனைவோர்களுக்கான திட்டங்களும் தீபாவளியின் போது 10,600 B40 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குதல் போன்ற வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வரிசையில், தற்போது வழிபாட்டுத் தலங்களில் கவனம் செலுத்துவது இந்திய சமூகத்தின் சமய, கலாச்சார மையங்களாக அவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது இந்த மடானி அரசு என இரமணன் குறிப்பிட்டார்.

பிரதமர் இந்திய வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி உதவி விண்ணப்பத்தை உடனடியாக அங்கீகரித்தார், இது நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் மடானி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிதி ஒதுக்கீடு சமூகத்தின் சமய, கலாச்சார தேவைகளுக்கு எடுக்கப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையைக் குறிக்கிறது என்றார்.
கடந்த ஏப்ரல் 2024 இல் தொடங்கப்பட்ட வணக்கமடானி திட்டம், இந்திய சமூகத்திற்கு தகவல்களை வழங்குதல், அவர்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான தளத்தை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் சமூகத்துடன் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியிருப்பாளர்கள், தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல்கள், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த நிதியைப் பெற்றுக் கொண்ட கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள், பிரதமர், டத்தோ ஶ்ரீ இரமணன்ழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இதர மக்கள் தலைவர்கள் ஆகியோருக்கு தங்களின் நன்றியைப் புலப்படுத்திக் கொண்டனர். கிடைக்கப்பெற்ற உதவி நிதியைக் கொண்டு கோயில் மேம்பாட்டுக்கும், சமய – சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏறொஆடு செய்வதிலும் முழு முனைப்பு காட்டுவதாகத் தெரிவித்தனர்.