படிவம் 6 மாணவர்களுக்கும் 150 ரிங்கிட் பள்ளி உதவி நிதி வழங்கப்படும்

2025 – 2026 கல்வியாண்டு முதல், படிவம் 6 மாணவர்களுக்கும் 150 ரிங்கிட் பள்ளி உதவி நிதி வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek அறிவித்துள்ளார். இந்த உதவி பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் MADANI அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது என்றார்.

இந்த விரிவாக்கத்தால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயனளிக்கும் என்றும், சுமார் 15 மில்லியன் ரிங்கிட் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார், தற்போதுள்ள படிவம் 6 மாணவர்கள் பிப்ரவரி 2025 இல் இந்த உதவிநிதியைப் பெறுவார்கள், புதிய மாணவர்கள் ஜூலை 2025 இல் பெறுவார்கள் என்றார்.

KUALA LANGAT வட்டாரத்தில் அமைந்துள்ள Tumbuk தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சு அனைத்து வகையான பள்ளிகளிலும் கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதில் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

தொழில்நுட்பம். தொழிற்கல்வி, படிவம் 6 கல்வியை விரிவுபடுத்துவதும் இதில் அடங்கும். விழாவில் மாணவர்களுக்கு tablet அருவிகளும் நன்கொடைகளும் வழங்கப்பட்டன.

WATCH OUR LATEST NEWS