18 இந்தோனேசிய காவல் துறை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

டிச. 22-

வடக்கு ஜகார்த்தாவில் நடைபெற்ற Djakarta Warehouse Project இசை நிகழ்ச்சியில் மலேசியக் குடிமக்களை மிரட்டியதாக சந்தேகிக்கப்படும் 18 இந்தோனேசிய காவல் துறை அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் Metro Jaya மாவட்டம், Metro மத்திய Jakarta மாவட்டம், Kemayoran காவல் நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். பல புகார்களை அடுத்து, தொழில்முறை, பாதுகாப்புப் பிரிவுபிரிவினர் இவர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர்.

இதனை பொதுத் தகவல் பிரிவின் தலைவர் Brigadier Jeneral Trunoyudo Wisnu Andik உறுதிப்படுத்தினார்.

மலேசிய குடிமக்கள் கட்டாய சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கடப்பிதழைக் காட்டும்படி கேட்கப்பட்டதாகவும், போதைப்பொருள் பரிசோதனை எதிர்மறையாக இருந்தும் பணம் செலுத்தும்படி கேட்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது.

மூன்று நாள் DWP இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 15 ஆம் நாள் அன்று முடிவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர் . மேலும், அதிகாரிகள் உடன் ஒத்துழைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சி ஆசியாவின் மிகப்பெரிய மின்னணு இசை விழாக்களில் ஒன்றாகும்.

WATCH OUR LATEST NEWS