மேலும் 48 மணி நேரம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

டிச. 22-

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய ஏர்பஸ் A330 neo விமானம், தனது முதல் பயணத்திலிருந்தே தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததால், மேலும் 48 மணி நேரம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை உற்பத்தித் தரமும் விமான விநியோகத்தில் ஏற்பட்டக் குறைபாடுகளுமே இதற்குக் காரணம் என்று Malaysia Aviation Group தெரிவித்துள்ளது.

புதிய விமானத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இதற்கு அசல் பாகங்கள் உற்பத்தியாளர்களே பொறுப்பு என்றும் MAG நிர்வாக இயக்குநர் Izham Ismail தெரிவித்தார். இந்த சிக்கல் மலேசியா ஏர்லைன்ஸின் நற்பெயரைக் கெடுப்பதாகவும் அவர் கூறினார்.

Rolls-Royce Trend 7000 இயந்திரத்தால் இயங்கும் இந்த புதிய விமானம், கோலாலம்பூரில் இருந்து Melbourneனுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டபோது இயந்திரக் கோளாறுகளைச் சந்தித்தது. இதனால், அடுத்தடுத்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்த தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய ஏர்பஸ் நிறுவனம் மலேசியா ஏர்லைன்ஸுக்கு உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளது. தற்போது, கோலாலம்பூரில் இருந்து Melbourneனுக்கான பயணத்திற்கு பிற மாடல் விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் என்று Izham Ismail கூறினார்.

WATCH OUR LATEST NEWS