பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்து அகற்றியுள்ளது

டிச. 22-

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் – DBKL, பொது வழிகளைத் தொந்தரவு செய்கிற வகையில் விற்பனையாளர்களின் வணிகப் பொருட்களை தலைநகரின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்து அகற்றியுள்ளது. இந்த நடவடிக்கை, பொதுமக்களின் புகார்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவும், பொது இடங்களின் ஒழுங்கையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்தோடும் மேற்கொள்ளப்பட்டது.

Jalan Tun Sambanthan, Jalan Thambipillay, Jalan Sultan Abdul Samad, Jalan Tuanku Abdul Rahman , Chow Kit Monorail நிலையம் அருகே Jalan Sultan Azlan Shah ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1974 ஆம் ஆண்டு சாலை வடிகால் கட்டடச் சட்டத்தின் படி இந்த பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது என இன்று முகநூலில் வெளியிடப்பட்ட அறிக்கையில் DBKL குறிப்பிட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் நாற்காலிகள், பிளாஸ்டிக் மேசைகள் , பொது இடங்களில் வைக்கப்பட்ட பிற கருவிகள் ஆகியன அடங்கும். இந்த பொருட்கள் ஆவணப்படுத்தலுக்காக DBKL பறிமுதல் கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

வணிகர்களும் விற்பனையாளர்களும் சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் இணங்க வேண்டும் என்று DBKL வலியுறுத்தியுள்ளது. மேலும், பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து கண்காணிப்பும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், புகார்களை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS