Teluk Intan & sitiawan Shining Starz அமைப்பு Kalachara Tiruvizha with Starz 1.0

டிச. 27-

கடந்த டிசம்பர் 22ஆம் நாள், சித்தியவான், சுங்கை வாங்கி தோட்டத்தில் வீற்றிருக்கும் ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் ஆதரவோடு Teluk Intan & sitiawan Shining Starz அமைப்பு Kalachara Tiruvizha with Starz 1.0 எனும் பண்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிகக் கோலாகலமாக நடத்தி முடித்தது.

காலை 8.30 மணி அளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், வண்ணம் தீட்டும் போட்டி, பாடல் திறன் போட்டி, பாரம்பரிய உடை போட்டி, கோலப் போட்டி, தோரணம் பின்னும் போட்டி, நடனப் போட்டி, பூச்சரம் தொடுக்கும் போட்டி, தெய்வ அலங்காரப் போட்டி ஆகியன இடம் பெற்றன.

மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் பி40 பிரிவைச் சேர்ந்த 50 மாணவர்களுக்குப் பள்ளிக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கலைக்கு முதலிடம் கொடுப்பது மட்டும் இல்லாமல் சமூக சேவைக்கும் முக்கியத்துவம் வழங்கிய இந்த நிகழ்ச்சிக்கு இளம் வள்ளல் DATO IR.B SATHIA BALAHவும் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவர் ML.MANIVANNANனும் தலைமை ஏற்றார்கள் .

பாடகர்கள், M S PRABHU, பாடகிகள் Vaishnavi , Suganiya ஆகியோரோடு மலேசிய மண்ணின் நட்சத்திரம் Boomerangx Coco Nanthaவின் இன்னிசைப் படைப்பு, Mark Maco அதிசயிக்க வைக்கும் மாய வித்தை ஆகிய அங்கங்களூடன் நாட்டின் புகழ்பெற்ற நடனக் குழு எனப் பாரட்டப்படும் Shining Starz நடனக் குழுவின் துள்ளலான நடனப் படைப்பும் வந்திருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இரவு 11.30 வரை இந்த நிகழ்ச்சியின் குதூகலம் குறையாமல் நீடித்து இருந்ததற்கு சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டு ஆதரவளித்ததே காரணம் என T Teluk Intan & sitiawan Shining Starz அமைப்பின் தலைவர் சாதனை சுடர்மாமணி Master Ugaantarun Sugumar குறிப்பிட்டார்.

கலைக்கென ஒரு திருவிழா நடத்தப்பட வேண்டும் எனும் உன்னத நோக்கத்தைக் கையில் எடுத்து அதனை பல சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் Master Ugaantarun

போட்டிகளில் பங்கு பெற்று தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து போட்டியாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

இந்த மாபெரும் கலாச்சாரத் திருவிழா மிகவும் விமரிசையாக நடத்தி முடிக்க தமக்குப் பக்க பலமாக இருந்த சிங்கப்பூர் GRK Gold Palaceஇன் உரிமையாளர் ந. கிஷாலினிக்கும் ஈப்போ, கிளேபாங் Sri Guru Sri Di Nathar பக்தர்கள் அமைப்பின் பொறுப்பாளர் MD.Navinathaனுக்கும் Master Ugaantarun தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதே சமயம், குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்ய உறுதுணையாக இருந்த Dato Dr.Vijayan , சித்தியவான், சுங்கை வாங்கி தோட்ட ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் தலைவர் Kathiravan Suppiah , இன்பத்தமிழன், Shining Starz நடனக்குழுவின் இயக்குநர் Selvam Govandaisamy ஆகியோருக்கும் Master Ugaantarun நன்றி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS